37 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் அஸ்வின்

இந்தியா- அவுஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி புனேயில் நடந்து வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுக்கு 256 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டார்க் (61) ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அஸ்வின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் வெறும் 5 பந்துகள் நீடித்த நிலையில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 260 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டைகளை இழந்தது.

இந்த நிலையில் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற கடந்த போட்டிகளில் அஸ்வின் 4 நாடுகளில் மொத்தமாக 64 விக்கெட்களை கைப்பற்றி கபில் தேவ் 37 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

கடந்த 1979-80ல் இந்தியாவில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் அணித்தலைவரான கபில் தேவ் மொத்தமாக 63 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like More from author