4 வார கால அவகாசம் சசிகலா உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சிறைத்தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம், ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளது.

மேலும் இன்றே மூவரும் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவரச மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தீர்ப்பை ஏற்கிறோம், அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் கட்சிப் பணிகள் இருக்கிறது, அதனை சரி செய்ய வேண்டும்.

உடல்நிலை சரியில்லை என்பதால் உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். ஆகையால் 4 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

You might also like More from author