சசிகலா பொதுச்செயலரை தேர்தல் இன்றி தற்காலிகமாக நியமிக்கும் அம்சம் இல்லை

அதிமுகவில் சசிகலா முறைப்படி கட்சி உறுப்பினர்களின் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தேடுக்கப்படாததால் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலாவின் உத்தரவுகள் சட்டப்படி செல்லாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக கட்சி விதிகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் கூறியதாவது, அதிமுகவின் கொள்கை மற்றும் சட்ட விதி, 20ன் கீழ், அதிமுக பொதுச்செயலரை, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அந்தமான் தீவுகளில் செயல்படும், அதிமுகவின் அனைத்து பிரிவு உறுப்பினர்களின் ஓட்டுகள் மூலம் மட்டுமே தெரிவு செய்ய முடியும்.

அந்த விதிகளில், பொதுச்செயலரை தேர்தல் இன்றி தற்காலிகமாக நியமிக்கும் அம்சம் இல்லை. எனவே, தற்போது பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா பிறப்பிக்கும் உத்தரவுகள் சட்டப்படி செல்லாது.

அவர் கட்சியின் உறுப்பினராக இருந்தால் அது மட்டுமே செல்லும். மாறாக, பொதுச்செயலர் அந்தஸ்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. யாரையும் நீக்கவோ, சேர்க்கவோ முடியாது.

இதுகுறித்து சட்டரீதியாக அணுகினால் நியமன பொதுச்செயலரின் உத்தரவுகள் செல்லாது என தீர்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

You might also like More from author