Mar 7, 2017
33 Views
0 0

புளி தரும் புது தகவல்…!

Written by
banner

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல பயிர் புளி. தெற்கு ஆசியாவில் அதிகமாக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

விதை நீக்கிய புளி சந்தையில் விற்கப்படுகிறது. ‘தாமரின்டஸ் இண் டிகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட புளி ‘பபேசி யேசி’ தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’ பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, உணவில் மணமூட்டவும், சுவையூட்டவும் புளி பயன்படுகிறது. புளி மட்டுமல்ல, கொழுந்து, புளி இலைகளும் சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. மேலும் புளியங்க்கொட்டையில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன.

புளி நீருடன் சேர்ந்து, செரிமான அமிலங்களின் சுரப்புகளை ஒழுங்குபடுத்தி, செரிமான செயல்பாட்டினை தீவிரத்தை விரைவு படுத்து கிறது. உடலில் தேங்கும் அதிகப்படியான பித்தத்தின் கெடுதல் தரும் தன்மையை மாற்றி, பித்தத்தின் அளவை இயல்பு நிலைக்கு மாற்று கிறது.

பண்டைய காலம் முதல் கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை நாட்களில் நடைபெறும் கோவில் விசேஷங்களின் போது “பானகம்” எனப்படும் பானம் அனைவருக்கும் இலவசமாக கொடுக்கும் வழக்கமிருந்தது. (இன்றைய நாட்களில் அப்பழக்கம் மறைந்து விட்டது) நீராகக் கரைக்கப்பட்ட பழைய புளியின் கரைசல் நீரில் சரியளவாக நாட்டுச் சர்க்கரை மற்றும் சிறுஅளவில் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பானம்தான் “பானகம்” என அழைக்கப்பட்டது. கோடை வெப்பத் தாக்குதல் காரணமாக பலருக்கும் குடல் வறட்சி ஏற்படும். இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, அடிவயிற்றில் வலி (சூட்டுவலி), வாய் உலர்வு மற்றும் உதடுகளில் வறட்சி காரணமாக அடங்கா நீர்த்தாகம் – உதடுகள் உரிந்து – வெடித்து இரத்தக் கசிவு போன்ற சீர்கேடுகளில் ஒன்றிரண்டோ அல்லது அனைத்துமோ ஏற்படும்.

குடலில் ஏற்படும் வறட்சியைப் போக்கி அவைகளின் செயல் மேம்பாடுகள் மேம்பட பானகம் உதவுகிறது. பழைய புளியின் கரைசலும் நாட்டுச்சர்க்கரையும் (அல்லது மண்டவெல்லம் எனப்படும் கரும்பு வெல்லம்) சமஅளவில் சேர்க்கப்பட்டால் இவை இரண்டும் சேர்ந்து வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி விடும் காரணமாக மேலே கண்ட நன்மைகளை அடையலாம்.

இயற்கையை நமக்கு சாதகமாக்கி வாழ்வியல் நடைமுறைகளை மற்றும் (நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திடும் நடைமுறை) உணவே மருந்தாகும் தந்திரத்தை உலகிலுள்ள எந்த நாட்டிலும் இல்லை. நம் கலாச்சாரத்தில் மட்டுமே பரந்து விரிந்து வாழ்க்கை முறையாயிற்று. எலும்பு மஜ்ஜைகளில் வரம்புமீறிய வெப்பம் தாக்கப்பட்டால் அம்மை ஏற்பட்டு விடும் வாய்ப்பாகிறது. கடுமையான வெயில் காலங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமுன்னரே தவிர்க்கப்பட்டுவிடும் வாய்ப்பாகிறது மழை மற்றும் குளிர்காலங்களில்; இத்தகைய பானங்களை பருகலாகாது.

புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பிலிப்பைன்ஸில் இலைகள் ‘டீ’ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது. வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு மருந்தாகிறது. புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும். புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும். புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும். புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும். புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும். புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். மேலும் இதை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும். புளியமர வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குஷ்டரோகத்திற்கு உபயோகப்படுகின்றன. உடல்சூட்டை தணிக்கும் சிறந்த மருந்து. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கண் எரிச்சல் சீக்கமே சரியாகிவிடும்.

புளி கஷாயம் முதலில் புளியின் இலை துளிர்களை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் கொஞ்சம் நீர் விடவேண்டும். இறுதியில் அந்த துளிர்களை நீரில் போட்டு நீண்ட நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் புளி கஷாயம் தயார். மலேரியா வருவதை தடுக்கும். இரத்தத்தை சுத்திகரிக்க உதவும். மஞ்சள் காமாலை ஜலதோஷம் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை விரட்டும் தன்மை கொண்டது என்றால் மிகையாகாது.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் அழகு கலை சிற்பி டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *