பிரிட்ஜோ எனது மடியிலேயே சரிந்து உயிரிழந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ(22) பலியானார். இவர் சென்ற விசைப்படகில் அவரது சித்தப்பா டிட்டோவும் இருந்தார்.

அவரிடம் சம்பவம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: இந்திய கடல் எல்லையில் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் வலை விரித்து இருந்தோம். மார்ச் 6-ம் தேதி இரவு 9 மணியளவில் மீன்பாடு எடுக்க (வலையை இழுக்க) தயாரானோம். அப் போது இலங்கை கடற்படை வீரர்கள் 2 வாட்டர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்கள் எங்கள் வலையை அறுத்துக்கொண்டு செல்லுமாறு கூறினர். நாங்கள் எங்கள் எல்லையில்தான் மீன் பிடிக்கிறோம் எனக் கூறினோம். அதனையடுத்து இலங்கை கடற் படை வீரர்கள் திரும்பிச் சென்றனர்.

பின்னர் 6-க்கும் மேற்பட்ட வாட்டர் ஸ்கூட்டரில் வந்த இலங்கை கடற்படையினர், திடீ ரென துப்பாக்கியால் சுட்டனர். அப்போது பிரிட்ஜோ கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. உடனடியாக படகை ராமேசு வரத்துக்கு திருப்பினோம். வரும் வழியில் பிரிட்ஜோ, கால் வலிப்பதாக கூறினார். அப்போது நான் மீனவர் சங்கத் தலைவரும், எனது மாமாவுமான சேசுவுக்கு தகவல் தெரிவித்தேன்.

அவரை வயர்லெஸ் மூலம் இந்திய கடலோர காவல்படைக் கும், இந்திய கடற்படைக்கும் தகவல் தெரிவித்து, காப்பாற்ற வருமாறு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. அவர்கள் வந்திருந்தால், குண்டு பாய்ந்த பிறகு 45 நிமிடம் உயிருடன் இருந்த பிரிட்ஜோவை காப்பாற்றி இருக்கலாம். பிரிட்ஜோ எனது மடியிலேயே சரிந்து உயிரிழந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

படகு ஓட்டுநரான ஜெரோன்(29), கை மற்றும் தொடையில் குண்டடி பட்டு ராம நாதபுரம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெரோன் கூறும்போது,

“நாங்கள் இந்திய கடல் எல்லையில் வலை விரித்துவிட்டு காத்திருந்தோம். அப்போது வாட் டர் ஸ்கூட்டரில் வந்த இலங்கை கடற்படையினர், எங்களது வலை களை அறுக்கச் சொன்னார்கள். திடீரென வாட்டர் ஸ்கூட்டரை எங்கள் படகில் மோதிவிட்டு, துப்பாக்கியால் சுட்டனர். அதில் எனக்கு கையில் காயம் ஏற்பட் டது. பிரிட்ஜோ காயம்பட்டு உயிரிழந்தார்.

தமிழக மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் துப்பாக்கிச்சூடு என்பதே இருக்காத அளவுக்கு அரசு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மீன்பிடிக்கச் செல்ல முடியும்” என்றார்.

You might also like More from author