G.C.T யின் Herbal Tea யை வாங்கி பயன்பெறுவீர்

நமது G.C.T யின் Herbal Tea யில் சேர்க்கப்பட்டுள்ள பல மூலிகை பொருட்களில் மிகவும் அரிய பல சக்திகளை கொண்டது. அஸ்வகந்தி மற்றும் ஆவரம்பூ இவை இரண்டின் மருத்துவ குணங்கள் மட்டும் நீங்கள் தெரிந்து கொண்ட உடனயே G.C.T யின் Herbal Tea யை வாங்கி பருகுவீர்கள் என்பது மட்டும் உன்மை.

காங்கிரீட் காடுகள் நடுவில் கார், பஸ் எனும் வண்டி வாகங்களின் இரைச்சல் சப்தத்துடன் இவைகளின் புகைகளை சுவாசித்து வாழும் நகரவாசிகளின் அத்தனை ஆரோக்கிய பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை கொண்ட சகல நோய் நிவார்ணியான அஸ்வகந்தியின் தூய தமிழ்ப் பெயர் அமுக்கரா என்பதாகும்.

அமுக்கரா முழுத்தாவரமும் வெப்பத் தன்மையும், காரச் சுவையும் கொண்டது. இவை சிறுநீர் பெருக்கும், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை போக்கும், வீக்கத்தை குறைக்கும், வாத நோயை கட்டுப்படுத்தும், உடலை தேற்றும், ஆண்மையை அதிகமாக்கும்.

அமுக்கரா வேரின் நோய் எதிர்ப்புத் திறன், நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை போன்றவை தற்போதைய உயர்நிலை ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமுக்கரா, இது கோவை மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வர்த்தக ரீதியாக பயிர் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அமுக்கிரி, அகவகந்தா, அகவகந்தி ஆகிய மாற்று பெயர்களும் இதற்கு உண்டு. அமுக்கரா இலைகள், விதை, வேர்க்கிழங்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அகவகந்தா என்கிற பெயர் அமுக்கராவின் காய்ந்த வேர்களைக் குறிக்க இந்திய மொழிகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

ஆண், பெண் இருபாலருக்கும் உடல் அசதி, மூட்டுவலி ஆகியவை நீக்கும் வல்லமை கொண்டது. உடல் பலத்தை அதிகரிக்கச் செய்யும் பிரசவ காலத்தில் ஏற்படும் அசதியை கண்டிப்பாக நீக்கும்.

அடுத்து ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள்:

ஆவாரம் பூ பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ “ என்ற மருத்துவ பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால், நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. அரைப்பலம் ஆவரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஊட்டம், பெரும் தாகம் போன்றவை குணமாகும்.

பூச்சூரணத்தையோ, பூவை குடிநீராக்கி பாலில் கலந்தோ இதழ்களை கறிக்கூட்டாகவோ, நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும்¸ உடலுக்கு பலத்தை தரும். மேனி பொன் மேனியாகும்.

மேலும் மேனிக்கு தங்க நிறத்தை கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ, பொடி சேர்த்து  கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு,  பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய்,  குடற்புண், வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது  மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்,  உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி,  சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால்,  உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

நாகரீக வாழ்க்கையில் பார்க்க முடியாத இதுபோன்ற ஆயுர்வேத மூலிகையால்  தயாரிக்கப்பட்ட G.C.T யின் Herbal Tea நகரமக்களுக்கு, ஒரு  தேவாமிர்தம் என்றால் மிகையாகாது.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

 

You might also like More from author