இளம் மேனியில் இன்றைய கன்னியர்கள் கண்ணில் பட்டவை

இன்றைய இளம் வர்க்கத்தின் கவனத்தை கவரும் வகையில் பார்வையாளர்களை சொக்க வைத்து சுண்டி இழுக்கும் வகையில், வியாபார விளம்பரங்கள் வித விதமாக, விநோதமாக வந்து கொண்டே இருக்கிறது.

பொருட்களின் தரம் நிரந்தரமானதா? அதன் உண்மை தன்மை எத்தகைய சாத்தியமானது என்பதை பற்றி எந்த விளம்பர படைப்பாளிகளும் கவலைப்படுவதில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் வர்த்தகர்களின் கல்லா பெட்டியை நிறைக்கும் நிரந்தரமான வசூல் வாடிக்கையாளர்களை உருவாக்குவதே. இதுதான் அவர்களின் பகட்டான விளம்பர படைப்புகளின் சூட்சமம் என்றால் மிகையாகாது.

நிறைய பத்திரிக்கைகளில் வரும் நுகர்பொருட்களின் விளம்பரங்களை நீங்கள் உற்றுபார்த்தால் ஒரு உண்மை தெரியும், அதாவது மது பாட்டில்களில் மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு, குடி குடியை கெடுக்கும் என்றும். சிகெரட் பெட்டிகளில் புகை நமக்கு பகை, புகை உடல் நலத்துக்கு கேடு என்று, கண்ணுக்கு தெரியாத சின்ன எழுத்தில் அச்சிடப்பட்டு இருக்கும்.

அதுபோல்தான் பல நுகர்பொருள் விளம்பரங்களில் “பக்கவிளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் பொறுப்பல்ல” என்றும் “இந்த விளம்பரத்தின் அனைத்து பொறுப்பும் அந்த நிறுவனத்தையே சாரும்” என்றுதான் பல பெரிய, பெரிய முன்னனி செய்தி ஊடகங்கள், அவர்கள் வெளியிடும் விளம்பர பொருட்களுக்கு பொறுப்பு ஏற்றுகொள்வதில்லை.

விற்பவரின் திறமை, வாங்குபவரின் தலை எழுத்து என்று தான், இன்று பல நுகர்பொருட்கள் சந்தை படுத்தப்படுகின்றன. ஆனால் எங்களின் Nature’s Gift,Herbal & Ayurvedic Products ன் மூலிகை தயாரிப்புகள் எல்லாம் பட்டவர்த்தமான ஒரு வெள்ளை அறிக்கை.

அங்கம் முழுவதும் பொங்கும் இளம் மேனியில் இன்றைய கன்னியர்கள் கண்ணில் பட்ட, கண்ட கண்ட இரசாயன கழிவுகளை வழித்து எடுத்து  தேய்த்து.. பூசி வருகின்றனர். இது நாளடைவில் பூஞ்சான் விளைவுகளால் உடல் நோஞ்சானாக போய் விடக் கூடாது என்பதே எங்கள் GCT யின் கவலையாகும். அதன் விளைவுகளில் உருவான பல Herbalபொருட்களில் ஒன்றுதான் பட்டு போன்ற மேனிக்கு Bath powder இந்த Herbal Bath Powder ரை எங்கள் நிறுவனம் நீண்ட நெடும் நாட்களில் ஆய்வுக்கு பின் மிகப்பெரிய விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் உருவாக்கி தந்து இருக்கிறது என்ற அப்பட்டமான பொய்யை சொல்ல தயாராகவில்லை.

இந்த Bath Powder எல்லாம் நம் பாட்டிகள் செய்து நம்மை குளிப்பாட்டி மகிழ்ந்த நலுங்கு மாவு எனும் ஸ்நான பவுடர். அதாவது குளியல் பொடி.

இதுமட்டுமல்ல நமது GCT யின் அனைத்து தயாரிப்புகளும் நமது முன்னோர்கள் கற்றுத் தந்த பாரம்பரிய மிக்க ஆயுர்வேத மூலிகை பொருட்களே…!
Herbal bath powder எனும் நலுங்கு பவுடரில் கலந்துள்ள கஸ்தூரி மஞ்சளின் மருத்துவ மகிமையை நாம் பார்த்தோம். தொடர்ந்து முல்தானியின் அருமையை பார்ப்போம்.

அழகு கலையில் முல்தானி மெட்டியின் நன்மைகள்!!!

முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகூட்டும் ஒரு ஒப்பனை பொருள். முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது. இது அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்கு அடங்கியுள்ளது. முல்தானியில்நன்மைகள் ஏராளம்.

சருமத்தின் துவாரங்களில் உள்ள அசுத்தங்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்க வல்லது. முகத்தில் உள்ள பருவுக்கு காரணமான காரணிகளை நீக்குவதன் மூலம் புதிய பருக்கள் வராமல் தடுக்கிறது. மேலும் எவ்வித எதிர்விளைவுகளும் இல்லாத ஒரு தூய்மைப்படுத்தியாகவும் விளங்குகிறது. முல்தானி மெட்டி சருமத்தில் உள்ள தேவையில்லாத எண்ணெய்யை உறிஞ்சி பருக்களும், கட்டிகளும் வராமல் தடுக்கிறது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சருமம் பொலிவிழந்து காணப்படும். சருமத்தில் உள்ள துவாரங்கள் மற்றும் செல்களில் எண்ணெய் பசை அதிக அழுக்கை உண்டாக்கி விடும்.

முல்தானி மெட்டி சருமத்துவாரத்திலும், செல்களிலும் உள்ள எண்ணெய், அழுக்கு மற்றும் தூசிகளையும் நீக்க வல்லது. இதுவே முல்தானி மெட்டியின் மிக முக்கியமான பயன்பாடு. ஸ்கரப்பர் முல்தானி மெட்டி துடைத்து தேய்த்து கழுவும் ஸ்கரப்பராகவும் பயன்படுகிறது. இதை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் வெண் புள்ளிகளையும் நீக்குகிறது. தோலில் உள்ள இறந்த செல்களையும், கரும்புள்ளிகளையும், வெண் புள்ளிகளையும் நீக்குவதற்கு ஃபேஸ் பேக்காகவும் ஸ்கரப்பாகவும் இது பயன்படுகிறது.

வறட்சியான தோலை கொண்ட மக்கள் முல்தானி மெட்டியை குளிர் காலங்களில் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இதை தவிர, அனைத்து வகையான தோலை கொண்டவர்களும் முல்தானி மெட்டியின் பயனை பெறலாம்.

முல்தானி மெட்டியின் பயன்கள்!

முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது.

1. இது இயற்கையாக உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால், சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை நீக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம்.

2. புண்களால் ஏற்பட்டுள்ள தழும்புகள், சிறிய தீப்புண் அடையாளங்கள் அல்லது இதர தழும்பு வகைகளை பெரிய அளவில் குறைக்க முல்தானி மெட்டி உதவும்.

3. ஆரஞ்சு தோலின் பொடி மற்றும் முல்தானி மெட்டியை சரிசமமான அளவில் கலந்து ஹேர் பேக் ஒன்றை தயார் செய்திடவும். இதனை தலைச்சருமத்திலும் முடியிலும் தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு பிறகு, தண்ணீரை கொண்டு தலையை கழுவுங்கள். மிதமான ஷாம்பு கொண்டு, முடியை கழுவுங்கள். பொடுகை சிறந்த முறையில் குறைக்க இந்த வீட்டு சிகிச்சையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பின்பற்றவும்.

முடியின் நுனிகள் பிளவுபடுவதை தடுக்க இது கண்டிஷனராகவும் செயல்படும். உங்கள் முடியை முல்தானி மெட்டி கொண்டு அடிக்கடி கழுவுங்கள். இதனால் உங்கள் முடி ஈரப்பதத்துடன் விளங்கி, நுனிகள் பிளவுபடுவது தடுக்கப்படும்.

மேலும் நமது குளியல் பொடியில் கலக்கப்பட்டுள்ள ரோஜா, புதினா இவைகளின் மருத்துவ குணத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் அழகு கலை சிற்பி டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

You might also like More from author