கரிசலாங்கண்ணி, மற்றும் கறிவேப்பிலை ஆயுர்வேத மூலிகை பொருட்களின் மிக முக்கியமான

நமது GCT யின் Hair growth powder மற்றும் Hair growth oil ல் சேர்க்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்டுள்ள ஆயுர்வேத மூலிகை பொருட்களின் மிக முக்கியமான செம்பருத்தி, சீயக்காய், கறிவேப்பிலை மற்றும் மருதாணி, கரிசலாங்கண்ணி, நெல்லி, திரிபாலா போன்றவைகளின் மருத்துவ குணங்களில் இன்று கரிசலாங்கண்ணி, மற்றும் கறிவேப்பிலை பற்றி பார்ப்போம்.

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் உள்ளது. கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணி கீரையில் தங்க சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘A’ அதிகம் உள்ளன. வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையை சமையல் செய்து சாப்பிட்டாலும், இதன் சாற்றை 100 மிலி சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்பு தன்மை உண்டாகும்.

மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான மஞ்சள் காமாலை நோய்களுக்கும் மிக சிறந்த மருந்தாகும்.

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணி சாறு 2 சொட்டில் 8 சொட்டு தேன்  கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசாலை கிடைக்கும் போது சேகரித்து சுத்தம் செய்து, நன்றாக காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு, தினமும் 5 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

கரிசலாங்கண்ணி சாற்றை தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும், நரையும் மாறிவிடும்.

கரிசலாங்கண்ணி மிக சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டு காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்து கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணி உணவாகவோ, மருந்தாகவோ பயன்படுத்தினால் அறிவு விருத்தியாகும்.

கரிசலாங்கண்ணியை கொண்டு பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. கூந்தல் தைலங்களிலும் இதன் சாறு சேரக்கப்படுகிறது. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்தால் என்றும் இளமையுடன் திகழலாம்.

சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளை கரிசலாங்கண்ணி நீக்கும்.

ஒற்றை தலைவலியால் துன்பப்படுகிறவர்கள் இந்த கீரையை மென்று உள் நாக்கில்  தேய்க்க வேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலியும் அகலும்.

நீரழிவு நோயாளிகள் காலையில் 10 கருவேப்பிலையும், மாலையில் 10 கருவேப்பிலை இலையும் பறித்த உடனே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெறும் வயிற்றில் தினமும் கருவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரழிவில் உடல் பருமனாவது தடுக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.

இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கருவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் ஒன்று விஷயம் உள்ளது.

அதாவது நரை முடி வந்தவர்களும், உணவிலும் தனியாகவும் கருவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.

கருவேப்பிலை மருந்தாக பயன்படுவதால் பசிமிகும், தாது பலம் பெருகும், வயிற்றில் வெப்பமுண்டாகி வாயுவைத் தொலைக்கும்.

ஒருபுடி இலையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறும் வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும்.

கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.

அஜீரணக்கழிச்சல், சீதக்கழிச்சல் உடையவர்களுக்கு கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு பச்சையாக உண்டு வருவது நல்லது.

கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பகற்றியாகச் செயல்பட்டு, சுரத்தை குணப்படுத்தும்.

பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் 10 கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை இளநரையை தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து  ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் அழகு கலை சிற்பி டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

You might also like More from author