Mar 16, 2017
1 Views
0 0

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி

Written by
banner

திருவண்ணாமலை, மார்ச் 16:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தி.மலை திருவள்ளுவர் சிலை
அருகிலிருந்து பேரணியை மாவட்ட தலைவர் மு.தங்கராஜ் தலைமையில் தலைவர்
அ.அருண்பாஷா துவக்கிவைத்தார். மாநில பொருளாளர் எம்.தங்கராஜ்
சிறப்புரையாற்றினார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக காந்தி நகர்
பைபாஸ் மைதான திடலை சென்றடைந்தது 8வது ஊதியக்குழுவை உடனடியாக
அமுல்படுத்திட வேண்டும் 1.1.2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம்
வழங்கிட வேண்டும் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய
பயனாளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் சாலை பணியாளர்கள் 41
மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் என்பன 6 அம்ச
கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. இந்த பேரணியில் 300க்கும்
மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர்
மு.பாஸ்கரன் நன்றி கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com