இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி காயமடைந்து விளையாட நான் தயாராகவே உள்ளேன்

நூறு சதவீத உடற்தகுதி இருந்தால் தான் தர்மசாலா டெஸ்டில்  பங்கேற்பேன் என்று இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் நாளை துவங்க உள்ளது. இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்திய கேப்டன் கோஹ்லி தர்மசாலா டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்  இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய கோஹ்லி “அணியில் எல்லோருக்கும் ஒரே நடைமுறை தான். எனக்கு எந்த வகையில்  விதிவிலக்கு அளிக்கப்படாது. முழுமையான உடல் தகுதி இருந்தால் தான் கடைசி டெஸ்ட் போட்டியில்  விளையாடுவேன். பிசியோதெரபி சோதனைகளுக்கு பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என்றாலும் அணியில் விளையாட நான் தயாராகவே உள்ளேன் ” என்று தெரிவித்துள்ளார்.

You might also like More from author