வரலட்சுமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது

வரலட்சுமி தமிழ் சினிமாவையும் தாண்டி மலையாள சினிமாவில் மம்முட்டி படம் மூலம் கால் பதித்துவிட்டார். சமுத்திரக்கனி தமிழில் நடித்து, இயக்கி, தயாரித்த அப்பா படம் அனைத்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படத்திற்கு ஆகாச மிட்டாயீ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் நாயகியாக கமிட்டாகி இருந்த நடிகை வரலட்சுமி திடீரென்று படத்தில் இருந்து விலகியுள்ளார். இதுபற்றி அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது என்று கூறி வெளியே வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன்னுடைய இந்த முடிவுக்கு ஓகே சொன்ன ஜெயராம், சமுத்திரகனி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

You might also like More from author