ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவசர அழைப்பு

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை வரும் 2ம் திகதி சந்தித்து பேசவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என பல வருடங்களாகவே அவர் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் அவர் பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை என கூறினார்.

மேலும், இலங்கைக்கு செல்லும் விடயத்திலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் உங்கள் அன்புக்கு கட்டுப்பட்டு பயணத்தை ரத்து செய்கிறேன். வருங்காலத்தில் இலங்கை போவதை தடுக்காதீர்கள் என கூறினார்.

இந்நிலையில் வரும் 2ஆம் திகதி தமிழகத்தில் உள்ள மொத்த ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அவர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

இது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like More from author