Mar 31, 2017
1 Views
0 0

ரஜினிகாந்தை மலேசிய பிரதமர் நஜிப் சந்தித்து பேசியுள்ளார்.

Written by
banner

சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை மலேசிய பிரதமர் நஜிப் சந்தித்து பேசியுள்ளார்.

மலேசியாவின் பிரதமர் நஜிப் ரஜாக் ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இன்று தனது மனைவி ரோஷ்மாவுடன் சென்னை வந்த நஜிப் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்தார்.

அங்கு இருவரும் பரஸ்பர நலன் விசாரித்து கொண்டார்கள்.

ரஜினிக்கு மலேசியாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மலேசிய அரசு அவருக்கு பல்வேறு உதவிகளை செய்தது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே மலேசிய பிரதமரை சந்தித்ததாகவும், மலாக்கா தூதராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் வதந்தியே எனவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர்களை சந்திப்பதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Article Categories:
இந்தியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com