Home சினிமா தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்

தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்

21

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் அவருடைய மகளாக நடித்த தன்ஷிகா, ஆக்ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் என அபாரமாக நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.

தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விழித்திரு’ படத்திலும் துணிச்சலான திருட்டுத் தொழிலில் ஈடுபடும் பெண்ணாக நடித்துள்ளார்.

மேலும் ‘சினம்’ என்ற குறும்படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலிவுட் திரையுலகில் தற்போது பெரும்பாலான நடிகர்களே சிகரெட் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்துவரும்நிலையில் ‘சினம்’ குறும்படத்தில் தன்ஷிகா சிகரெட் புகைக்கும் காட்சிகளில் தைரியமாக நடித்துள்ளாராம். அதுமட்டுமின்றி, இந்த குறும்படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்தக் குறும்படம், கொல்கத்தா பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தன்ஷிகா தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அவரை தனித்துவமான நடிகையாக உருவாக்குகின்றன.