Apr 18, 2017
3 Views
0 0

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வெப்பத்திலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

Written by
banner

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது நிலவும் கோடைகால வெப்பத்தின் தாக்கம் இன்று(17.04.2017) மற்றும் 18.04.2017 ஆகிய இருநாட்கள் ஒரு சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்;சித் தலைவர் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண்களுக்கு கூலிங்கிளாஸ் மற்றும் வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்தவும் மற்றும் காலணிகளை அணிந்து செல்லவும் வேண்டும்.

வெளியில் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ அல்லது செல்ல பிராணிகளையோ விட்டு செல்ல வேண்டாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com