அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 17.4.2017 மற்றும் 18.4.2017 ஆகிய இரு நாட்கள் அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

இப்புகைப்படக்கண்காட்சியை இலட்சக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டார்கள்.

தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இப்புகைப்படக் கண்காட்சியானது மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்ளும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கோயில் திருவிழாக்கள், மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடமான வார மற்றும் மாதச் சந்தைகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கண்காட்சிகள் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முக்கிய நிகழ்ச்சிகளான சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், வீரப்பூர் பெரியகாண்டியம்மன் திருக்கோயில் மற்றும் சத்திரம், மத்திய பேரூந்து நிலையம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.


அந்தவகையில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திiர்த் தேர்த்திரு விழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சுற்றியுள்ள தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை போன்ற சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலும் மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை முன்னிட்டு இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சியானது அமைக்கப்பட்டது.

தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான பசுமை வீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், பெண்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர், தாலிக்குத் தங்கத்துடன் கூடிய நிதியுதவி, விலையில்லா அரிசி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய புகைப்படங்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இப்புகைப்படக் கண்காட்சியானது 17.4.2017 மற்றும் 18.4.2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியினை இலட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com