Apr 19, 2017
10 Views
0 0

திருமணத்திற்கு எதிர்ப்பு காதலியை விஷம் அருந்த சொல்லிவிட்டு காதலன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Written by
banner

பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதலியை விஷம் அருந்த சொல்லிவிட்டு காதலன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் பல்லவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விஜயபிரபு. இவர் பொறியியல் பட்டதாரி என்று கூறப்படுகிறது.

விஜயபிரபு அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால், இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

விஜயலட்சுமி முதலில் விஷம் அருந்திவிட, விஜயபிரபு விஷம் அருந்த மறுத்துவிட்டார். இந்த தகவல் அவர் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு, தலைமறைவாகியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் விஜயலட்சுமியை அருகில் உள்ள அனுமதித்துள்ளனர். ஆனால் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விஜயலட்சுமியின் பெற்றோர் மகளை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி பொலிசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Article Categories:
தமிழகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *