வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இருங்களுர், கொணலை, திருப்பட்டூர், எதுமலை, தளுதாளப்பட்டி, தத்தமங்கலம், அய்யம்பாளையம், பூனாம்பாளையம், திருவெள்ளரை, தீராம்பாளையம், திருப்பஞ்சீலி, ஆகிய ஊராட்சிகளில் ரூபாய் 2 கோடியே 69 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள், மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இருங்களுரில் 22 இலட்சம் மதிப்பில் ஏரிகள் தூர்வாரும் பணி, கொணலையில் 31 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, திருப்பட்டூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, எதுமலை ஊராட்சியில் ரூபாய் 4 இலட்சத்து 12 ஆயிரம் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும்பணி, திருவெள்ளரை ஊராட்சியில் ரூபாய் 3 இலட்சம் செலவில் தாமரை குளம் சிறுபாசன குளத்தினை அழப்படுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்(கிராமங்கள்) கீழ் 5 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாகவும் இருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.மலர்விழி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.அனுராதா ஆகியோர் உடன் இருந்தனர்.

You might also like More from author