65-வது தேசிய திரைப்பட விருதுகள் முழுப்பட்டியல்

65th-National-Award
தேசிய திரைப்பட விருதுக்கான முழுப்பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. பாகுபலி-2-க்கு 3 பிரிவுகளில் தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளது.
65-வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் இன்று அறிவித்தார் அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* சிறப்பு பிரிவில் பார்வதி மேனன், நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு  விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
* சிறந்த படம் பகத் பாசில் நடித்த  தொண்டிமுதலும் திரிக்‌சாட்சியும்
* சிறந்த இந்திப்படம் நியூட்டன்
* சிறந்த தமிழ் படம்  TO LET ( செழியன் இயக்கியுள்ள இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை)
* மாம் இந்தி படத்தில் நடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது
*  சிறந்த தெலுங்கு படம் – காஸி
* காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது
* சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாசுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த கன்னட படம்- ஹெப்பட்டு ராமக்கா
சிறந்த குழந்தைகள் படம்- மேகோர்கியா
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது பெறும் படம்- டப்பா(மராத்தி)
சிறந்த நடிகர்- ரித்தி சென் (நகர்கிர்டான், மேற்கு வங்கமாநிலம்)
சிறந்த துணை நடிகர்- ஃபகத் ஃபாசில் (தொண்டிமுதலும் திரிக்‌சாட்சியும் , மலையாளம்)
சிறந்த துணை நடிகை- திவ்யா தத்தா (இராடா)
சிறந்த குழந்தை நட்சத்திரம்- பனிதா தாஸ், (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், அசாம்)
தாதசாகேப் ஃபால்கே விருது- வினோத் கண்ணா, நடிகர்
சிறந்த பொழுதுப்போக்கு படம்- பாகுபலி- 2
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி-2 படம் 3 பிரிவுகளில் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.
சிறந்த சண்டைப்பயிற்சி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சிறந்த பொழுதுபோக்கான திரைப்படம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் பாகுபலி-2 படம் விருது வென்றுள்ளது.
சிறந்த இயக்குநர்- ஜெயராஜ் (பயானகம், மலையாளம்)
சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது- பம்பாலி (சிஞ்ஜர்)
சிறந்த ஒளிப்பதிவு- பயானகம், மலையாளம்
சிறந்த பாடலாசிரியர்- பிரஹலாத் (’மார்ச் 22’, முத்து ரத்தனந்த பியாடே)
சிறந்த ஆடியோகிராஃபி – வில்லேஸ் ராக்ஸ்டார்ஸ், அசாமி
சிறந்த ஒலி அமைப்பு- லடுக்கி
சிறந்த அரங்கமைப்பு- டேக் ஆஃப் (சந்தோஷ் ராமன், டேக்-ஆஃப், மலையாளம்)
சிறந்த ஒப்பனை- ராம் ரஜாஜ் (நகர்கிர்டான்,)
சிறந்த ஸ்பெஷல் எஃப்கெட்ஸ்- பாகுபலி 2
சிறந்த நடனமைப்பு- கணேஷ் ஆச்சாரியா (டாய்லெட், இந்தி)
சிறந்த சண்டைக்காட்சி- அப்பாஸ் அலி மொஹுல் (பாகுபலி 2)
சிறந்த திரைக்கதை- தொண்டிமுதலும் திர்க்‌ஷாஷ்யம், மலையாளம்
சிறந்த தழுவல் திரைக்கதை- பயானகம், மலையாளம்

 

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com