விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு ஊக்கத்தொகை

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் 2015-16 தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு வழங்கப்படும் உதவி ஊக்கத்தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.குமார் அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.டி.ரத்தினவேல் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.

தமிழக கிராமங்களில் உள்ள அனைத்து இளைஞர்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி, அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளிலும் பங்கு பெறும் பொருட்டு ‘’கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள்’’ ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.

விளையாட்டில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வருவதற்கு, தமிழகத்தை சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பன்னாட்டு மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி பெறும் பொழுது அவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக தமிழக அரசு ஊக்கத்தொகையை அளித்து ஊக்குவித்து வருகிறது.
அதன்படி 2015-16 ஆம் ஆண்டில் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்டத்ததை சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் விளையாட்டு உபரகணங்கள் வாங்குவதற்கு உதவி ஊக்கத்தொகையாக தங்க பதக்கம் வென்ற 18 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ரூபாய் 6 ஆயிரமும், வெள்ளி பதக்கம் வென்ற 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ரூபாய் 4 ஆயிரமும், வெங்கலப்பதக்கம் வென்ற 6 வீராங்கனைகளுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வீதம் என மொத்தம் 29 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூபாய் 1 இலட்சத்து 40 ஆயிரம் உதவி ஊக்கத்தொகையாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சந்திரசேகர் (மணப்பாறை), திரு.எம்.செல்வராஜ் (முசிறி), மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like More from author