விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வருகின்ற 26.04.2017 முதல் 16.05.2017 வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வருகின்ற 26.04.2017 முதல் 16.05.2017 வரை 21 நாட்களுக்கு திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி முகாம் நடைபெறும்.

தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, கையுந்துப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை மற்றும் டேக்வோண்டா ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தினமும் காலை மாலை ஆகிய நேரங்களில் ஊட்டச்சத்து வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி எண் 0431-2420685 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

You might also like More from author