அம்மா” திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் முதியோர் ஓய்வூதியம்

“அம்மா” திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர்பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்பஅட்டை, நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கிராமங்களில் வாழும் கடைகோடி மக்களுக்கும் அதிகமான அரசு சேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி 28.04.2017 அன்று பின்வரும் கிராமங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது.
எண். வட்டம் கிராமம்

  1. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) ஆலத்தூர்
  2. திருச்சிராப்பள்ளி (மேற்கு) பாண்டமங்கலம்
  3. திருவெறும்பூர் வாழவந்தான்கோட்டை
  4. ஸ்ரீரங்கம் திருமலைசமுத்திரம்
  5. மணப்பாறை இனாம் ரெட்டியப்பட்டி
  6. மருங்காபுரி கண்ணூத்து
  7. இலால்குடி இடையாற்றுமங்கலம்
  8. மண்ணச்சநல்லூர் திருவாசி
  9. முசிறி வாளசிராமணி
  10. துறையூர் சிக்கத்தம்பூர் (வடக்கு)

தொட்டியம் கொளக்குடி

மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வட்டாட்சியர் முதலான வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக தீர்வு காண்பர். எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like More from author