ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 453 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது

திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம் கூட்டுறவு பண்டகசாலைஇ பீமநகர் கடை எண்:2 நியாயவிலைக் கடைக்கு செய்தியாளர்களை அழைத்துச் சென்று செய்தியாளர்கள் சுற்றுப் பயணம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் மேற்க்கொள்ளப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 453 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் (ளுஆயுசுவு ஊயுசுனு) வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லாத உன்னதத் திட்டமான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் மாவட்டம் கொரட்டூரில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 01.04.2017 அன்று புதிய மின்னனு குடும்ப அட்டை வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் தற்போதைய குடும்ப அட்டைக்கு மாற்றாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள்(ளுஆயுசுவு ஊயுசுனு) வழங்கும் பணி 1.4.2017 முதல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்பொழுது 7 இலட்சத்து 59 ஆயிரத்து 595 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. இதுவரை மொத்தம் 3 இலட்சத்து 51 ஆயிரத்து 735 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பெற்றுள்ளன. புதிய மின்னனு குடும்ப அட்டையில் (ளுஆயுசுவு ஊயுசுனு) இதுவரையில் இருந்த அனைத்து விபரங்களும் இருக்கும். பழைய குடும்ப அட்டை எப்படி செயல்பட்டதோ அப்படியே செயல்படும். மேலும் அந்த அட்டையை பயன்படுத்தி என்ன பொருட்கள் வாங்கி கொண்டிருந்தீர்களோ தொடர்ந்து அப்படியே பெற்றுக்கொள்ளலாம்.

புதிய மின்னணு குடும்ப அட்டை செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் மூலம்இ நியாய விலைக் கடை வியாபாரம் வெளிப்படையாக நடக்கும். மின்னணு குடும்ப அட்டை பயன்படுத்தி விற்பனையாளர் அவருடைய Pழுளு இயந்திரத்தில் பதிவு செய்து பட்டியல் இடும் முறையில் நீங்கள் வாங்கிய பொருட்களும்இ அதற்கு நீங்கள் கொடுத்த விலையும் வலைதளத்தின் பதிவேட்டில் பதிவாகிவிடும். நீங்கள் கொடுத்துள்ள கைபேசி எண்ணிற்கு நீங்கள் வாங்கிய பொருட்கள்இ கொடுத்த விலை பற்றிய விபரங்கள் குறுஞ்செய்தி (ளுஆளு) மூலம் உங்கள் கைபேசிற்கு வந்துவிடும்.

நீங்கள் வாங்காத பொருட்களை நீங்கள் வாங்கியதாக பதிவு செய்தால் குறுஞ்செய்தி (ளுஆளு) மூலம் உங்களுக்கு தெரியவரும். உங்கள் நியாயவிலைக் கடையில் உள்ள இருப்பு நிலவரம் அவ்வப்போது தொடர்ந்து பதிவு செய்யப்படும். அதனை நீங்கள் தங்களது ளுஅயசவ Phழநெ-ல் வுNநீனுளு என்ற செயலியை (யுPP) பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இதன் மூலம் நியாய விலைக்கடை விற்பனையாளர் தனது கடையில் இருப்பு இருக்கும்போது இருப்பு இல்லை எனக் கூறமுடியாது. நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட செல்பேசியிலிருந்து Pனுளு (ளுpயஉந) 101 என்று வலிந செய்து 9980904040 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி (ளுஆளு) அனுப்பினால் இருப்பு நிலவரம் தெரியும்.

நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட செல்பேசியிலிருந்து Pனுளு (ளுpயஉந) 102 என்று வலிந செய்து 9980904040 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி (ளுஆளு) அனுப்பினால் உங்களது நியாயவிலைக் கடை திறந்து இருக்கிறதா அல்லது மூடப்பட்டு இருக்கிறதா என்ற தகவலை தெரிந்துக்கொள்ளலாம். சென்னையில் ஆணையர் அலுவலகத்திலோஇ மாவட்ட வழங்கல் துறை அலுவலர் அலுவலகத்திலோ இதை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்க முடியும். இந்த Pழுளு என்ற விற்பனை முனைய இயந்திரம் 2016ம் ஆ;ண்டு ஜுன் மாதம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நியாயவிலைக் கடையில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு கணக்கிற்கு வராமல் வெளியே செல்வது இதன் மூலம் தடுக்கப்படும். போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கவும்இ முறைகேடுகளை தவிர்க்கவும் பயன்படுகிறது.

புதிய மின்னணு குடும்ப அட்டை (ளுஆயுசுவு ஊயுசுனு) பெறுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. புதிய மின்னணு குடும்ப அட்டை (ளுஅயசவ உயசன) பெறுவதற்கு இதுவரைஇ குடும்ப அட்டைதாரர்கள் அவர்கள் ஏற்கனவே நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் எட்டு இலக்க எண் (ழுவுP) அனுப்பப்பட்டு அந்த குறுஞ்செய்தியில் பெறப்பட்ட எட்டு இலக்க எண்ணை விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்து அதன்பின்னர் புதிய மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ழுவுP எண் பெற்று புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதால்இ தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டை தயார் நிலையில் உள்ளவர்களுக்கு தங்களது புதிய மின்னணு குடும்ப அட்டை(ளுஆயுசுவு ஊயுசுனு) தயார் நிலையில் உள்ளது என குறுஞ்செய்தி (ளுஆளு) வரும். இத்தகவலின் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று தங்களது புதிய மின்னணு குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து அந்த குடும்ப அட்டைக்கான பொருட்கள் ஒதுக்கீடு அளவு நியாயவிலைக் கடைகளில் உள்ள Pழுளு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும்இ அந்த அளவிற்கு மட்டுமே விற்பனையாளர் விற்பனை செய்ய இயலும். அதைத் தொடர்ந்து நாம் வாங்கும் பொருள் விபரம் அனைத்தும் Pழுளு இயந்திரத்தில் பதிவாகும். இது தொடர்பான விபரங்களை குறுஞ்செய்தியாக (ளுஆளு) நம்முடைய கைப்பேசியில் தெரிந்துக்கொள்ளலாம். இதன் மூலம் முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்பின்றி தகுதியானவர்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிய அட்டை விண்ணப்பிக்கஇ பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல்இ முகவரி மாற்றம்இ கடை மாற்றம்இ குடும்பத்; தலைவர் மாற்றம் போன்ற காரணங்களுக்காக வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை. பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கருகிலேயே உள்ள பொது இ-சேவை மையத்தை அணுகி தங்களது கோரிக்கைகளை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அட்டை காணாமல் போனால் நகல் அட்டை பெறுவதற்கும் இ-சேவை மையங்களை தொடர்பு கொள்;ளலாம்.


பொது விநியோகத் திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1967 அல்லது 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மின்னணு குடும்ப அட்டையில் பிழைகள் ஏதேனும் காணப்பட்டால் அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டு திருத்திக் கொள்ளலாம். மேலும் தங்களது ளுஅயசவ Phழநெ-ல் வுNநீனுளு என்ற செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் குடும்ப அட்டை தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு இதுவரை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 735 மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பபெற்று உள்ளனஇ அவற்றில் 1 இலட்சத்து 77 ஆயிரத்து 453 மின்னணு குடும்ப அட்டைகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பெற்றுள்ளன. இதர மின்னணு குடும்ப அட்டைகள் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப.இ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


செய்தியாளர் சுற்றுபயணத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.வேலுமணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might also like More from author