Apr 21, 2017
8 Views
0 0

69 ஊராட்சிகளில் குடிநீர் பஞ்சம் தீர்க்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Written by
banner

திருவண்ணாமலை, ஏப் 21:

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போர்க்கால அடிப்படையில்
தீர்க்கக்கோரி திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்ச்சிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு எம்.பிரகலநாதன், மாவட்டக்குழு ஏ.சேகரன், ந.அன்பரசன், எஸ்.அபிராமன், எம்.தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் எஸ்.ராமதாஸ், நகர செயலாளர் ஏ.தங்கமணி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆனந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பேசினர். பெரியகல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் அண்ணா நகர் அருகே மினி டேங்க் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். மன்னார்பாளையத்தில் கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்க  வேண்டும். போதிய நீராதாரமுள்ள பழைய கிணறுகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். வேங்கிக்கால் ஊராட்சியில் விரிவாக்க பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். அரசு மூலம் போடப்படும் ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கும்வரை போர்போட விதிமுறைகளை தளர்த்திட வேண்டும். குடிநீர்
பிரச்சனை நிலவுகின்ற கிராமங்களுக்கு அரசு வாகனம் மூலம் காலையிலும் மாலையிலும் குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும், ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி சீரமைத்திட வேண்டும், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் பழுதடைந்துள்ள மின்மோட்டார்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *