பிரான்ஸின் புதிய ஜனாதிபதி பெண்களை கவர்ச்சியாக நடனமாட வைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது

பிரான்ஸின் புதிய ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் ஒரு தீவிர பெண்ணியவாதி என்று கூறப்பட்ட போதிலும் தனது தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் பெண்களை கவர்ச்சியாக நடனமாட வைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மே 7ம் திகதி நடந்து முடிந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 39 வயதான மேக்ரோன் 66.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

மேக்ரோனின் வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பாரிஸ் தெருக்களில் கூடினர். இந்நியைில், வெற்றியை கொண்டாட மேக்ரோன் ஏற்பாடு செய்த விழாவை கண்ட மக்கள் கோபமடைந்துள்ளனர்.

விழா மேடையில் பெண்கள் கவர்ச்சியாக உடை அணிந்து மக்கள் முன்னிலையில் நடனமாடியது நாட்டு மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிர பெண்ணியவாதி என கூறி வந்த மேக்ரோன், தனது வெற்றி விழாவில் பெண்களை கவர்ச்சியாக நடனமாட வைத்ததற்கு சமூக ஆர்வலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

You might also like More from author