May 16, 2017
4 Views
0 0

ஸ்பெயின் நாட்டில் 100 மச்சங்கள் மற்றும் 500 தழும்புகளோடு பிறந்த பெண் மொடலாக கலக்கி கொண்டிருக்கிறார்

Written by
banner

ஸ்பெயின் நாட்டில் 100 மச்சங்கள் மற்றும் 500 தழும்புகளோடு பிறந்த பெண் தற்போது மொடலாக கலக்கி கொண்டிருக்கிறார்.

பளிச்சென்ற சிரிப்பு, ஜொலிக்கும் நிறத்தில் இருந்தால் மட்டும் தான் மொடலாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக என்னைப்போன்று சற்று வித்தியாசமாக பிறந்திருப்பவர்களும் மொடல் அழகியாகலாம் என கூறுகிறார் Alba Parejo.

Congenital Melanocytic Nevus குறைபாட்டால் பிறந்தவர் Alba Parejo. அதாவது பிறப்பிலேயே உடலில் 100 மச்சங்கள் மற்றும் 500 பிறப்பு தழும்புகளோடு பிறந்துள்ளார்.

தனது உடலில் உள்ள இந்த தழும்புகளை மறைப்பதற்காக சுமார் 5 வயது வரை 30 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார்.

மேலும், இவரின் உடலில் ஒரு பகுதி கருப்பாகவும், சில பகுதி வெள்ளையாகவும் இருக்கும்.

இவரது இந்த தோற்றத்தை இவரது நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர், இதனால் இவர் பலமுறை இரவு நேரத்தில் அழுதுள்ளார்.

இந்நிலையில் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதையடுத்து, இவருக்கு ஆதரவுகள் குவிந்தன.

இதன் மூலம் நிறுவனம் ஒன்றில் மொடலாக தெரிவு செய்யப்பட்டார், விளம்பர பலகைகள், செய்திதாள்கள் மற்றும் பேருந்துகளில் இவரது புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மொடலாக மாறியதன் மூலம் தனது தனிப்பட்ட தோலை நினைத்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Article Categories:
உலகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com