Home தமிழகம் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வருடாந்திர கலைத் திருவிழா: கோலாகலமாக நடைபெற்றது

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வருடாந்திர கலைத் திருவிழா: கோலாகலமாக நடைபெற்றது

27

ஃபெஸ்டம்பர் – திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வருடாந்திர கலைத் திருவிழா. இந்த வருடத்திற்கான பதிப்பை சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் தொடங்கும் வகையில் கார்ப்பி-டியம் என்னும் விருந்தினர் விரிவுரைப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் பிரபலமான ஜான்டி ரோட்ஸ்அவர்கள் கலந்துக் கொண்டு விருந்தினர் உரையாற்றினார். இவர் உலகின் தலைச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர். இந்நிகழ்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு என்.ஐ.டி-யின் பார்ன் ஹாலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் அஷோக் மனோகர் உரை வழங்கினார். இவர் ரூபி பில்டர்ஸின் இயக்குனர் மற்றும் TNPL-இன் ரூபி திருச்சி வாரியர்ஸின் உரிமையாளர் என்பது குறிபிடத்தக்கது. இவர்களுடன் ரூபி திருச்சி வாரியர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஷ்யாம் காங்கேயன், தலைமை பயிற்சியாளர் டீனு யோஹன், பேட்டிங் பயிற்சியாளர் அஜய் குடுவா கலந்துக் கொண்டனர். மேலும் என்.ஐ.டி திருச்சி-யின் இயக்குநர் டாக்டர். மினி ஷாஜி தாமஸ் மற்றும் மாணவர் நலப் பிரிவு தலைமையாளர் டாக்டர் எ.வி.ரெட்டி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

ஜாண்டி ரோட்ஸ் தனது கிரிக்கெட் நாட்களைப்பற்றியும், இந்தியாவின் மீது அவர் கொண்டுள்ள அன்பைப்பற்றியும், உலக கிரிக்கெட் மற்றும் தென் ஆப்ரிக்கக் கிரிக்கெட்டின் தற்போதைய சூழலைக் குறித்த அவரது கருத்தையும்தனது உரையில் குறுப்பிட்டார்.அவரது இந்த உரையை மாணவர்கள், ஆசிரியர்களென சுமார் 800 பேர் ரசித்துக் கேட்டனர்.அதைத் தொடர்ந்து நடைப்பெற்ற கேள்வி நேரப் பகுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இவர் ஆவலுடன் பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது.சர்வதேச  பிரபலத்தின் வருகை,செப்டம்பர் மாதம் 21-லிருந்து 24-வரை நடக்கவிருக்கும் ஃபெஸ்டம்பரின்  பிரமாண்டத்திற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது.