9, 10 மற்றும் 11,12ஆம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண்கள் குறைப்பு

ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் 9, 10 மற்றும் 11,12ஆம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது.

இதனை மாற்றி இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு ஆணையம் (CISCE) அறிவித்துள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பிற்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க பரிந்துரைத்ததன் பேரில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com