300 பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதிக்க முடிவு!

300-engineering-colleges

மாணவர்கள் சேராத காரணத்தால், ஏராளமான பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொறியியல் கல்வியில் சேருவோர் எண்ணிக்கை சரிந்து வருகிறது. இதனால் பொறியியல் கல்லூரிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதையடுத்து ஏஐசிடிஇ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 13.56 லட்சம் மாணவர்கள் படிக்கும் வகையில் இடம் அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த கல்லூரிகளை ஆய்வு செய்கையில், 300 கல்லூரிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக 30% கீழ் மாணவர் சேர்ந்துள்ளனர்.எனவே அடுத்த 2018 – 19 கல்வியாண்டில் இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும், பொறியியல் கல்லூரியாக செயல்பட தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவற்றை கலை அறிவியல் அல்லது தொழில்படிப்பு கல்லூரிகளாக மாற்றி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

You might also like More from author