செட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!

all-can-apply-on-online-for-set-exam-2018-from-today

கல்லூரிப் பேராசியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவிலான தகுதித் தேர்வு அதாவது நெட் அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு செட் , இதில் எதாவது ஒன்றில் தகுதி பெற வேண்டும்.

நெட் தேர்வை யுஜிசி அதாவது பல்கலைக்கழகம் மானியக் குழு சிபிஎஸ்இ மூலம் நடத்தி வருகிறது. செட் தேர்வை மாநிலத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகம் யுஜிசி-யிடம் அனுமதிபெற்று நடத்தும்.

தமிழகத்தில் செட் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை இந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

You might also like More from author