திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

திருவண்ணாமலை ஜன 8:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பாவை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சக்தி விலாச சபா மண்டபத்தில் பாவை விழா நடைபெற்றது. இவ்விழாவினை கோவில் இணை ஆணையர் சி.ஹரிபிரியா தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை
பாடல் மற்றும் பொருள் ஒப்புவித்தல் போட்டியும், கட்டுரை போட்டியும் நடைபெற்றது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை, 6ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை என மூன்று பிரிவுகளாக போட்டியில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5 நிமிடம் அவகாசம் அளிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதுமிருந்து 27 பள்ளிகளை சேர்ந்த 545 மாணவ மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும், முதல் 3 மாணவர்களை தேர்ந்தெடுத்து 24 பேருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் போட்டிக்கு நடுவர்களாக பொறுப்பேற்று நடத்தினர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற
மா£வர்கள் விரைவில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.

You might also like More from author