ஐமேக் ப்ரோ விற்பனை துவக்கம்! விரைவில் இந்தியாவில்!

Apple-iMac-Pro-to-launch-in-India-soon

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக டெஸ்க்டாப் கணினியான ஐமேக் ப்ரோ விற்பனை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. புதிய ஐமேக் ப்ரோ விலை 4,999 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,20,760 முதல் துவங்குகிறது.

முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐமேக் ப்ரோ விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதன் விலை ரூ.4,15,000 முதல் துவங்கும் என்றும் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர் அமர்வில் ஐமேக் ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐமேக் ப்ரோ சாதனத்தில் 27 இன்ச் ரெட்டினா 5K (5120×2880 பிக்சல்) டிஸ்ப்ளே, 100 கோடி நிறங்கள், 500 நிட்ஸ் பிரைட்னஸ், வைடு கலர், 8-கோர், 10-கோர் அல்லது 18-கோர் சியோன் பிராசஸர் மற்றும் 8 ஜிபி ரேடியான் ப்ரோ வீதா 56GPU, 16 ஜிபி ரேடியான் ப்ரோ வீகா GPU, 32 ஜிபி 2666 மெகாஹெர்ட்ஸ் மெமரி, 1000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்படுகிறது.

புதிய ஐமேக் ப்ரோ புதிய ரேடியன் ப்ரோ வீகா GPU மற்றும் 16 ஜிபி வரை ஹை-பேண்ட்வித் மெமரி, 3D ரென்டரிங், ஹை ஃபிரேம் விர்ச்சுவல் ரியாலிட்டி, மெஷின் லெர்னிங், உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 ஜிபி எஸ்.எஸ்.டி. மற்றும் 128 ஜிபி இசிசி மெமரி, நான்கு தன்டர்போல்ட் 3 போர்ட், இரண்டு உயர் ரக RAID அரே மற்றும் இரண்டு 5K டிஸ்ப்ளேக்களுடன் ஒரே சமயத்தில் இணையும் வசதி கொண்டுள்ளது.

மேலும் 10 ஜிபி ஈத்தர்நெட், 10 மடங்கு வேகமான நெட்வொர்க்கிங் வசதியை முதல் முறை வழங்குகிறது. அமெரிக்காவில் 8-கோர் மற்றும் 10-கோர் என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் 14-கோர் மற்றும் 18-கோர் பதிப்புகள் 6 முதல் 8 வாரங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் 18-கோர் மாடல் 13,199 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,46,910 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com