வடமாநிலங்களைத் தொடர்ந்து தமிழக ஏடிஎம்களிலும் பணப்பற்றாக்குறை!!

atm cash-crunch-in-vaniyambadi-and-ambur-towns

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஏடிஎம்-களில் கடந்த இரண்டு நாட்களாக பணம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், சில இடங்களில் ஏடிஎம்-கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால், அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதிலும், எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களிலேயே பெரும்பாலும் பணம் கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

முன்னதாக இந்தப் பிரச்சனை குறித்து விளக்கமளித்த நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, ‘’நாட்டிலும், வங்கிகளிலும் போதுமான பணம் இருப்பில் உள்ளது. தேவை காரணமாக சில இடங்களில் அதிக அளவில் பணம் எடுக்கப்படுவதால், இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

You might also like More from author