இனி இரவில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க முடியாது!

atms-in-cities-not-to-be-replenished-with-cash-after-9pm-govt

இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்களில் பணம் நிரப்ப கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், ஏடிஎம்களில் பண தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில், தனியார் ஏஜென்சிகள் மூலம் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏடிஎம்களில் பணம் நிரப்புவது குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஏடிஎம்களில் பணம் நிரப்பும் ஏஜென்சிகள், இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புறங்களில், மாலை 6 மணிக்குள்ளும், நக்சல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள்ளும் மட்டுமே பணம் நிரப்ப வேண்டும் என்றும் அதற்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பணம் கொண்டு வரும் வாகனங்களில், சிசிடிவி காமிரா, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஒரு வேனில் 5 கோடி ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு கருதி மத்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், நகர்புறங்களில், இரவு 9 மணிக்கு மேல், ஏடிஎம்களில் பணம் நிரப்பாமல் இருந்தால், பணத்தட்டுபாடு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

You might also like More from author