உ.பி.,பீஹார் இடைத்தேர்தல் பா.ஜ. தோல்வி.,காங் டெபாசிட்டை இழந்தது!

BJP-lost-LokSabha-By-Election-

உ.பி., பீஹாரில் நடந்த 3 லோக்சபாதொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. உ.பி., முதல்வர் யோகி தொடர்ந்து வெற்றி பெற்று வந்த கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ததால் கோராக்பூர் லோக்சபா தொகுதிக்கும், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ராஜினாமா செய்ததால் புல்புர் லோக்சபா தொகுதிக்கும், பீஹாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இதில், கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் 21 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். (இந்த தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றவர்).

துணை முதல்வர் கேசவ் மவுரியா ராஜினாமா செய்த புல்புர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 59 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழந்தது.

You might also like More from author