திருச்சி விமான நிலையம் அருகே பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா

trichy Darna black clothes in the public mouth

திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக விமான நிலையம் அருகே உள்ள இடங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி விமான நிலையம் அருகே உள்ள பட்டத்தம்மாள் தெரு குடியிருப்போர் பொதுநல சங்கம் சார்பில் செவ்வாய் அன்று அப்பகுதி மக்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது வசித்து வரும் 37வது வார்டு பகுதியிலேயே நிலம் ஒதுக்கி அதற்கு டிடிபி அப்ரூவல் வழங்க வேண்டும். அப்பகுதிக்கு முறையாக சாலை, மின் இணைப்பு, தெருவிளக்கு, குடிநீர் ஆகியவற்றை செய்து தர வேண்டும். வீட்டில் இருக்கும் ஒரு நபருக்கு அவர்கள் படிப்பிற்கு ஏற்ப கட்டவிருக்கும் விமான நிலையத்தில் வேலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு பட்டத்தம்மாள் தெரு குடியிருப்போர் பொதுநல சங்க தலைவர் ராஜா தலைமை வகித்தார். போராட்டத்தில் செயலாளர் பார்த்திபன், பொருளாளர் அன்பழகன், துணைத்தலைவர் செந்தில்குமார், துணைசெயலாளர் விஜயேந்திரன் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட 400 பேர் கலந்து கொண்டனர்.

You might also like More from author