கடும் அமளிக்கிடையே பட்ஜெட் மசோதா நிறைவேற்றம்

parliament

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே 2018ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடியது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் மக்களவை 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு நடுவே, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் நிதி மசோதாவை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவையை நடத்த விடாமல் தொடர்ந்து உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பியதால், எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

You might also like More from author