3-வதுநாளாக நீடிக்கும் அரசு பஸ் ஊழியர்களின் பேராட்டம்!

Bus-strike-TN-transport-workers-protest-enters-3rd

ஊதிய ஊயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் பேராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடித்தது.

போராட்டம் காரணமாக மாணவ,மாணவியர், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 865 பஸ்களில் இன்று காலைநிலவரப்படி 50 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையில்குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. காரைக்குடியில் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் 30 பஸ்களும், சத்திய மங்கலத்தில் 15பஸ்களும் இயக்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரியில் உள்ள பணிமனையில் 120 பஸ்களில் 3 பஸ்களும் புறநகர் பணிமனைகளில் 70 பஸ்களில் 2 பஸ்களும் இயக்கப்படுகிறது. நாமக்கல்லில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுகிறது. 333 பஸ்களில் 192 பஸ்கள் வரையில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடலூரில் 350 அரசு பஸ்களில் 44 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரப்பகுதியில் 50 சதவீத அளவிற்கே பஸ்கள் இயக்ப்படுகின்றன.

You might also like More from author