உலக அளவில் முதல் இடத்தில் டிரண்ட்டாகும் GoBackModi ஹேஸ்டேக்!

#gobackmodi

தமிழகத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹேஸ்டேக் தற்போது உலகம் முழுவதும் டிரண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இடையே சென்னை விமானம் நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கருப்பு பலூனும் பறக்கவிடப்பட்டது. பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ModiGoBack என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹேஸ்டேக் தற்போது உலகம் முழுவதும் டிரண்ட் ஆகி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

You might also like More from author