Home breaking காவிரி விவகாரம்.. கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை

காவிரி விவகாரம்.. கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை

24
Cauvery-issue-Muralidhar-rao-says-BJP-not-working
Cauvery-issue-Muralidhar-rao-says-BJP-not-working

காவிரி வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலுக்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் காவிரி விவகாரம் குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமான வாக்குறுதிகளை பா.ஜ., குறிப்பிட்டுள்ளது.

பா.ஜ., மூத்த தலைவர் முரளிதரராவின் பேச்சு இதனை உறுதி செய்வதாக உள்ளது. அவர் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜ., செயல்படாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இது தொடர்பாக கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

முரளிதரராவின் பேச்சுக்கு பதிலளித்துள்ள விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜ., செயல்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுகூடி போராடும். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜ., தேர்தல் அறிக்கை வெளியிட்டால் தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம் என தெரிவித்துள்ளார்.