காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் தர்ணா

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் ஜல்லிக்கட்டு போராட்டக்குழு சார்பில் தமிழக விவசாயிகளின் வஞ்சிக்கும்போக்கை மத்திய அரசு கைவிட்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் திருவண்ணாமலை அடுத்த கவுத்திமலை மற்றும் வேடியப்பன் மலையில் ஜின்டால் கம்பெனி மூலம் இரும்புதாது வெட்டி எடுக்கும் திட்டம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை ஜல்லிக்கட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராகவன் தலைமையில் இளந்தளிர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.பிரகாஷ் துவக்கிவைத்தார். இதில் ஜல்லிக்கட்டு போராட்டக்குழு இளைஞர்கள் , சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

You might also like More from author