தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்!

rain

தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (மார்ச் 14), காலை 8.30 மணியளவில் மினிக்காய் தீவுகளுக்கு தென் கிழக்கே 130 கி.மீ., தூரத்தில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை (மார்ச் 15 )முதல் படிப்படியாக, தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபி கடல் பகுதியில் வலுவிழக்கக்கூடும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 24மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவாலாக மழை பெய்துள்ளது.

ஒரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 20 செ.மீ., நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 2 நாட்களை பொறுத்த வரையில்(மார்ச் 14, 15), தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.குமரிகடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வரையிலும், சமயத்தில் 60 கி.மீ., வரை வீசக்கூடும். இதனால், குமரி, மாலத்தீவு கடல் பகுதிக்கு 14 மற்றும் 15 தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம். கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிக்கு 14 மற்றும் 15 தேதிகளில் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author