பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்;முதலிடத்தில் சென்னை!

chennai-is-the-safest-metro-city-to-women

இந்தியாவில் உள்ள 6 மெட்ரோ நகரங்களில் சென்னை தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பராமரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி, மும்பை, சென்னை உள்பட 6 மெட்ரோ நகரங்களில் நடந்த பெண்களுகு்கு எதிரான குற்றவழக்குகள் தொடர்பான புள்ளி விபரங்களை இந்த ஆவணக்காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தான் பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றச்சம்பவங்களாக 13,808 வழக்குகள் பதியப்பட்டுள்ளனர்.

You might also like More from author