வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது-சென்னை வானிலை மையம்

Chennai Weather Center

தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் ஆங்காங்கே அவ்வப்போது ஜில்லென மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:-
தென் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் . தென் தமிழக மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். என கூறினார்.

You might also like More from author