அமெரிக்காவுக்கு சீனா பதிலடி! இந்தியாவின் நிலை என்ன?

chinaamerica-

அமெரிக்காவில் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ள நிலையில், சீனாவும், அமெரிக்காவுக்குப் போட்டியாக தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது

அமெரிக்கா நிறுவனங்கள் தயாரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமையை திருடி, சீனா பொருட்கள் தயாரித்து வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இந்தியா, சீனாவில் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவிலோ வெளிநாடுகளின் பொருட்களுக்கு குறைந்த வரியே விதிக்கப்படுவதால், அங்கு உள்நாட்டு உற்பத்தியை விட, வெளிநாட்டுப் பொருட்கள் அதிக இடம் பிடித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த டொனால்டு டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், “மேக் அமெரிக்்கா கிரேட் அகைன்” (Make America Great Again) என்ற முழக்கத்தோடு, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களின் வரியை சமீபத்தில் உயர்த்தினார்.

அமெரிக்காவின் திடீர் வரி உயர்வுக்கு சீனா தனது அதிருப்தியை தெரிவித்தது. மேலும்,இதை போல் இந்தியாவும் தனது எதிர்ப்பை வெளிபடுத்த வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் பலர் கருத்து கூறிவுள்ளனர்

You might also like More from author