நெருங்கும் கிறிஸ்துமஸ்… பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாட்டம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விழாக் காலம் நெருங்கி வரும் வேளையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால் மக்கள் வங்கிகளில் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பெற்று வருகின்றனர். என்றாலும் மக்களிடம் போதிய பண புழக்கத்தில் இல்லை. பணத் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட தேவைகளுக்கு கூட போதிய பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.

பணத் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை. நகரின் மையப்பகுதிகளில் உள்ள ஏடிஎம்களும் போதிய பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

செயல்படும் ஒரு சில ஏடிஎம்களில் 2000 ரூபாய் மட்டும் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதால் சில்லறை பிரச்சனையும் உருவாகியுள்ளது. பல வங்கிகளில் போதிய பணம் கையிருப்பில் இல்லாததால் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச தொகையான ரூ.24 ஆயிரத்தை கூட வங்கிகளால் வழங்க முடியவில்லை. பெரும்பாலான வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணம் வழங்கப்படுவதில்லை.

தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை அடுத்தடுத்து வருவதால் பெரும்பாலான மக்கள் பணம் விழாவிற்கான செலவுகளை செய்யக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகி்ன்றனர்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com