காமன்வெல்த்: இந்தியா பதக்க வேட்டை!

Commonwealth Games: India's Medal Hunt!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன் வெல்த் போட்டியில் இன்று துப்பாக்கிச்சுடுதலில் 50 மீ. பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் தங்கம் வென்றார். மேலும் அஞ்சும் மவுட்கில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இவரைத் தொடர்ந்து ஆண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடும் பிரிவில் அனிஷ் பன்வாலாவும் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 57 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பூஜா தாண்டா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் 17 தங்கம், 10 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் இருந்து வருகிறது.

Advertisement

You might also like More from author