மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; காங்கிரஸ் மனு

No_Confidence_Motion

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்  பெரும்பாலான நேரம் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக வீணடிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி பாராளுமன்றத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடக்கி வருகின்றனர்.

 இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவை மனு கொடுத்துள்ளது. ‘
இதுதொடர்பாக மக்களவை செயலாளருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே அளித்துள்ள கடிதத்தில், மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் 27-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com