சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா உறுதி!

csk-to-retain-ms-dhoni-suresh-raina-undecided-on-third-choice

ஸ்பார்ட் பிக்ஸிங், முறைகேடுகளில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிக்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடைவிதிக்கபட்டது

இந்நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி 2018 ஐபிஎல் போட்டியில் மீண்டும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ல் நடைப்பெற உள்ள ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களை மீண்டும் ஏலம் முறையில் எடுக்கப்பட உள்ளது.

இருப்பினும் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் அதன் செலவீன தொகையாக ரூ. 80 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி மற்றும் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை அணி மீண்டும் தக்க வைத்துக்கொள்ளும் எனவும், 3வது வீரராக அஸ்வின் அல்லது ஜடேஜா தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.

You might also like More from author