சென்னை அணி வீரர்கள் ஆடும் வீடியோ வைரல் ஆகி உள்ளது!

CSK-

சென்னை அணி வீரர்கள் விளம்பரம் ஒன்றிற்காக ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. சென்னை அணி வீரர்கள் எல்லோரும் நேற்று ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள்.

சென்னை அணி வீரர்கள்  ஐபிஎல் போது காட்டப்படும் சில விளம்பரங்களுக்காகவும் நடித்துக் கொடுத்தார்கள்.

இதில் ஒரு விளம்பரத்தின் வீடியோ வைரல் ஆகி உள்ளது. இதில் சென்னை வீரர்கள் மிகவும் காமெடியாக ஆடி உள்ளார்கள்.

இந்த வீடியோவில் முரளி விஜய், பிராவோ, ஹர்பஜன் சிங் ஆகியோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தில் ஓடும் மஞ்சள் நிற ஆட்டோவில் வந்து இறங்கி, சென்னை அணி உடையில் நடனம் ஆடி உள்ளார்கள். இது ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.

தற்போது சென்னை அணியின் ஸ்பான்சராக முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இருக்கிறது. இதன் விளம்பரம் ஒன்றிற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.

You might also like More from author